பொதுத் தேர்தல் சின்னம் குறித்து இருவேறு கருத்து

9 mkj
9 mkj

பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து ஒரு பொது இலக்கினை நோக்கி செயற்பட வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிரணியுடன் உள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இரு கட்சிகளினதும் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இரு தலைவர்களும் கூடி எடுக்கும் தீர்மானமே முடிவாக இருக்கும். கட்சியிலுள்ள பிரதிநிதிகளாகிய நாம் கட்சித் தலைவர் மீது பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். ஏனையவர்களும் அவ்வாறு செயற்படுவதுதான் பொருத்தமானது. இடையில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதில் பயனில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.