வட மாகாண ஆளுநர் நியமன இழுபறிக்கான காரணம்

daglas 1
daglas 1

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநரை நியமிப்பதற்கு பொருத்தமான தமிழர் ஒருவர் இதுவரை இணங்காணப்படாமையின் காரணமாகவே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை நிலவுவதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கான தெரிவில் பொருத்தமான தமிழர் ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் இதுவரை இணங்காணவில்லை எனவும் இதன் காரணமாகவே வட மாகாண ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வட மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜைவை நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவையும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் வட மாகாணத்தின் ஆளுநர் நியமனத்தில் பொருத்தமான தமிழர் ஒருவர் இணங்காணப்படாதவிடத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகிறது.