ஐ.எஸ் கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு குற்றப் பத்திரிகை!

7 court
7 court

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கோயம்புத்தூர் தலைவராக கருதப்படும் மொஹமட் அசாருதீன் மற்றும் அவரது உதவியாளர் ஷெயிக் ஹிதயதுல்லாஹ் என்ற சந்தேகநபர் இருவருக்கு எதிராக குற்றவியல் சதி மற்றும் பயங்கராத குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோவையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மொஹமட் அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

இக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியனர்.

இதன்போது, மொஹமட் அசாரூதீன் என்ற சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்புகளை பேணி வந்தமை உறுதி செய்யப்பட்டதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பு சார்பில் கேரளாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருடனும் இவர் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.