தென்னாபிரிக்காவிற்கெதிரான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

england
england

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடரான இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் 17 பேர் கொண்ட அணி விபரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் 17 பேர் கொண்ட குழாம்.

ஜோ ரூட் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயர்ஸ்டோ, ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பெர்ன்ஸ், ஜொஸ் பட்லர், ஷக் க்ரௌலி, சாம் கரண், ஜோ டென்லி, ஜெக் லீச், மெத்யூ பிரகின்சன், ஒல்லி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்