சுவிஸ் அதிகாரியின் பயணத்தடை நீடிப்பு

swirserland
swirserland

கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளரின் பயணத்தடை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடத்தப்பட்ட சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளரின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் பணியாளர் டிசம்பர் 9ம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை 12ம் திகதி வரை நீடிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனியா சில்வெஸ்டர் பிரான்சிஸ் எனும் கடத்தப்பட்ட சுவிசர்லாந்து பெண் அதிகாரி 2 வாரங்கள் கடந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் நேற்றைய தினம் (Dec.08) குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.