வேக நடைப்போட்டியில் மலையக இளைஞருக்கு தங்கப்பதக்கம்

fast walk
fast walk

21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ எமஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மலேசியா கூச்சிங் சேவாக் விளையாட்டு அரங்கில் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் வேக நடைப்போட்டியிலேயே இவருக்கு இந்தத் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.