மாற்று அணிக்கான நேரம் இதுவல்ல

sumanthiran2
sumanthiran2

மாற்று அணிகள் எங்களுக்கு சவால் இல்லை எனவும், மாற்று அணி என்று சொல்லிக் கொண்டு வருபவர்களுக்கு தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஆகையினால் அவர்களுக்கு எந்தவிதமான செல்வாக்கும் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் கிடைக்காது. அவர்களது மாற்று அணி முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது.

கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற மாற்று அணிகள் ஒரு போதும் எங்களுக்குச் சவாலாகவே இருக்காது. ஆனால் இது மாற்று அணிக்கான நேரமல்ல என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். எங்களது மக்களுக்கும் அது நல்லாகவே தெரியும்.

எமது மக்கள் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் என்ன விதமாக வாக்களித்தார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு தருணம் காலம் என இந்த தருணத்தில் எப்படியாக இயங்க வேண்டுமென்பதெல்லாம் நன்றாகவே அவர்கள் அறிந்து ஊர்ஜிதம் செய்து வைத்துள்ளார்கள்.

ஆகவே வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒரு மாற்று அணியின் செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது என்று பரீட்சிர்த்துப் பார்க்கிற நேரம் இது இல்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனினும் அதையும் மீறி யாராவது மாற்று அணியென்று முன்வருவார்களாயின் அவர்களுக்கு எந்தவிதமான செல்வாக்கும் தேர்தலில் கிடைக்காது. ஆகையினால் மாற்று அணிகள் என்பது எமக்கு சவால் இல்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறோம்.

அப்படியாக மாற்று அணியொன்று வந்தால் நாங்கள் அதற்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான ஆதரவும் கிட்டாது என்பது தான் எங்களுடைய நம்பிக்கை.

நான் ஏற்கனவே சொன்னது போல எங்களுடைய மக்களுக்கு நிலைமை தெளிவாகத் தெரியும். ஆகையினாலே அவர்களுக்கு வாக்களிப்பது ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். இந்தக் கால கட்டத்திலே அவ்வாறு செய்யக் கூடாது என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகையினாலே அவர்களுடைய முயற்சி வெற்றியளிக்காது என்பது தான் என்னுடைய சிந்தனை என தெரிவித்துள்ளார்.