சூரியகிரகண அவதானிப்பு முகாமும், பயிற்சிப்பட்டறையும்

image
image

வடஇலங்கை, சூரியகிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை 26 டிசம்பர் 2019 அன்று பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரியகிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் மாணவர்களுக்கு வானியல் தொடர்பான பயிற்ச்சிப்பட்டறையை நடாத்தவும், கிரகணத்தின் போது விஞ்ஞான ஆய்வுக்குத் தேவையான அளவீடுகளை மேற்கொள்ளவும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கிரகணத்தை அவதானிப்பதற்கும் ஓழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

பயிற்ச்சிப்பட்டறைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பல் தேர்வு வினாப் பரீட்சை எதிர்வரும் 13 டிசம்பர் 2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு முன்னர், சூரியகிரகணத்தைப் பற்றியும் அதனைப் பாதுகாப்பான முறையில் அவதானிப்பது பற்றியும் விளக்கவுரையுடன் கூடிய காணொளி பரீட்சை மண்டபங்களில் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவினை மேற்கொள்ளாத மாணவர்கள் தமக்கு அண்மித்த பரீட்சை நிலையங்களுக்கு காலை 9 மணி தொடக்கம் 9.30 மணிக்கிடையில் உடனடியாகப் பதிவு செய்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் என ஒருங்கனைப்புக்குழு இணைப்பாளர் யாழ். பல்கலைகழக பௌதிகவியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பிரவிராஜன் தெரிவித்துள்ளார்.