அரசியின் விலையில் வரையறை

rice
rice

மூன்றுமாத காலப்பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதுடன், ஒரு கிலோகிராம் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை 98 ரூபாவாக வரையறுப்பதற்கும் தீர்மானித்திருக்கிறது.

அத்தோடு இறக்குமதி செய்யப்படும் கோதுமைமாவிற்கான வரியைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.