குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக போராட்டம்

stalin
stalin

இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது.

இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு எதிராக டிசம்பர் 17ம் திகதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.