குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினால் பா.ஜ.க இற்கு வீழ்ச்சி

thuraimurugan
thuraimurugan

இந்திய நாட்டின் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினர்களை பழிதீர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அன்னிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்து இந்தியாவில் தங்கி இருப்பவர்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்வதாக இருப்பின் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வரும் புத்த, சமண, இந்து, கிறிஸ்துவ மதத்தினரை இந்தியா குடிமக்களாக அனுமதிக்கும் இந்த சட்டம், இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்திருக்கும் தமிழர்களையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளதாம்.

எனவே இது தமிழ் இனத்துக்கும், சிறுபான்மை யினருக்கும் எதிரான சட்டம் என்பது எங்கள் வாதம்.

எனவே, இது ஜனநாயக முதுகெலும்பை முறிக்கிற சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான உயிர்க்கொல்லி, தமிழர்களை பழிவாங்கும் சட்டம் என்று தி.மு.க. மிகத் தெளிவாக தெரிந்து இருக்கிறது.

தி.மு.க. இளைஞர் அணியினை அடக்குகிற சக்தி அரசுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது, குடியுரிமை திருத்த சட்டமும் தெரியாது. இது தமிழனுக்கு எதிரானது என்பதும் தெரியாது.

இந்த சட்டம் பா.ஜனதா அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம் தான் அடிகோலும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.