அவுஸ்ரேலியாவிற்கு இலகு வெற்றி

aus vs nz
aus vs nz

அவுஸ்ரேலிய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 296 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் மார்னஸ் லபுசன்னே 143 ஓட்டங்களையும், டிராவஸ் ஹெட் 56 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரிம் பெய்ன் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரிம் சௌதி, நீல் வோக்னர் தலா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

நியூசிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அணி சார்பில் அதிக பட்சமாக ரோஸ் டெய்லர் 80 ஓட்டங்களையும், அணித்தலைவர் வில்லியம்சன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்ரேலிய பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுக்களையும், நதன் லயன் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

அவுஸ்ரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 9 விக்கட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. அணி சார்பில் பேர்ன்ஸ், லபுசன்னே அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்தின் பந்துவீச்சில் ரிம் சௌதி 5 விக்கட்டுக்களையும், வோக்னர் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

468 எனும் இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 171 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்கள் வித்ியாசத்தில் தோல்வியுற்றது.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக வொட்லிங் 40 ஓட்டங்களையும், கிரான்ட்கோம் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க், லயன் தலா 4 விக்கட்டுக்களையும், பட் கம்மின்ஸ் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனான மிச்சல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டார்.