சம்பந்தன் எதிர்ப்பால் தடுமாற்றத்தில் சுமந்திரன்!

1 hiran
1 hiran


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எல்லாம் வல்லவராக வலம் வருபவர் சுமந்திரன் எம்.பி. அவர் எடுக்கும் முடிவுகளில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தலையிடுவதில்லை. ஆனாலும், பெரும்பாலான முடிவுகள் அவரது காதுகளுக்கு எட்டிய பின்னரே எடுக்கப்படும்.


ஆனால், அண்மைக்காலமாக சில முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் அவருக்கு தெரிவிக்கப்பட்டன. 

இப்படி சுமந்திரன் எம்.பியின் வாக்குறுதி அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் கே.சயந்தன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும் , மாவை. சேனாதிராஜாவை தேசியப் பட்டியல் மூலம்  எம்.பியாக்கும் முடிவும்.


இந்த விடயங்கள் ஆரம்பத்திலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக சுமந்திரன் எம்.பியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கனடா கிளையுமே இந்த முடிவை எடுத்திருந்தன. இந்த நிலையில் விடயம் குறித்து அண்மையில் சம்பந்தரின் இல்லத்தில் தமிழரசுக் கட்சியினர் சந்தித்தபோது பிரஸ்தாபிக்கப்பட்டது.


சயந்தன் அல்லது ஆர்னோல்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், மாவை சேனாதிராஜாவுக்கு வாக்குப் பலம் இருப்பதால் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்ற ரீதியில் சம்பந்தன் கருத்துக் கூறியுள்ளார்.

சுமந்திரன் எதிர்பாராத இடத்தில் வந்த இந்த எதிர்ப்பால் அவர் தடுமாறிப் போயிருக்கின்றார் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.