வட கிழக்கில் தமிழிற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இடைநிறுத்தம்!!

polis station
polis station

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழிற்கு முன்னுரிமை வழங்குவதற்கு பணிக்கட்டடிருந்த நிலையில் அவற்றை பொலிஸ் திணைக்களம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ், மக்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கில் அரச கரும மொழியான தமிழ், தொடக்க மொழியாக இருக்க வேண்டுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

அவை தொடர்பான நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவை தொடர்பில் தென்னிலங்கை சர்ச்சைகள் தோன்றியுள்ளமையின் காரணமாக அவற்றை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.