இந்திய குடியுரிமை திருத்த சட்டம்- புதுவை மாநிலம் எதிர்ப்பு

narayanasamy
narayanasamy

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல்படுத்தியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மக்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஒரு சட்டமாகும், இந்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்களைப் பிரித்து இந்த நாட்டில் இந்து ராஜ்யம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற பா.ஜனதா முயற்சிப்பதாக தெரிவித்து டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி இந்த சட்டத்தை மறுத்துள்ள நிலையில், புதுச்சேரி மாநில முதலமைச்சரும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஆட்சியே போனாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.