பாகிஸ்தான் முன்னாள் அதிபரிற்கு தூக்குத்தண்டனை

musharaf
musharaf

தேசதுரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

76 வயதான முஷரப் பாகிஸ்தானின் இராணுவ தளபதியாக இருந்தபோது ஆட்சியை பிடித்து 1999ம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் சர்வாதிகாரியானார். கடந்த 2001 முதல் 2008ம் ஆண்டு வரை அதிபராக செயற்பட்டிருந்தார்.

2013ம் ஆண்டில் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் தேச துரோக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு முஷரப்பிற்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடல்நலம் சரியில்லாத அவர் 2016ம் ஆண்டு முதல் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரை பாகிஸ்தானுக்கு கொண்டு வர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.