சற்று முன்
Home / தமிழகம் / பிரதமர் மோடியை ஹிட்லராக வருணித்த அருந்ததி ராய்!

பிரதமர் மோடியை ஹிட்லராக வருணித்த அருந்ததி ராய்!

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலைக்கு அரசாங்கம் செயல்படுத்திய பணமதிப்பழிப்பு நடவடிக்கையே காரணம் என அருந்ததி ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நம் மீது பணமதிப்பழிப்பு சுமத்தப்பட்டபோது, நாம் வங்கிகளுக்கு வெளியே கீழ்ப்படிதலுடன் நின்றோம்.

இது நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தது…” என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும், “1935-ம் ஆண்டின் மூன்றாம் ரீச்சின் (பாசிச ஹிட்லரின் ஜெர்மன் பாராளுமன்றம்) நியூரம்பெர்க் சட்டங்களை ஒத்த கொள்கைகளுக்கு, நாம் மீண்டும் ஒரு முறை கீழ்ப்படிதலுடன் இணங்கப் போகிறோமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தமிழ்நாட்டு அரசின் வழக்கை விசாரிக்க தடைகோரிய சீமானின் மனு நிராகரிப்பு!

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் கட்சி முதன்மை ...