மணல் அகழ்வை தடுப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

daglas
daglas

மணல் அகழ்விற்கான வழித்தட அனுமதி நீக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் அதனை தவறாக பயன்படுத்துவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மணல் அகழ்வு தொடர்பாக தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தென்னிலங்கையில் மணல் அகழ்விற்கும், வடக்கில் மணல் அகழ்விற்கும் உண்டாகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.