சற்று முன்
Home / தமிழகம் / துபாயில் இறந்தவரின் உடல் தமிழகம் அனுப்பப்பட்டது

துபாயில் இறந்தவரின் உடல் தமிழகம் அனுப்பப்பட்டது

துபாய் நகருக்கு தமிழகத்தின் தேனி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் கடந்த நவம்பர் 28-ஆம் திகதி சுற்றுலா விசாவில் வேலை தேடி சென்றுள்ளார் .
அவர் தனது அறையில் தங்கியிருந்த போது எதிர்பாராத வகையில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 12 ஆம் திகதி மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரது மனைவி லதா தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஈமான் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையடுத்து ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமிது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஜெயக்குமார் உடலை இந்தியா கொண்டு சென்று இந்திய துணை தூதரகத்தின் உதவியின் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது மனைவி லதாவிடம் ஜெயக்குமார் உடலை ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தமிழ்நாட்டு அரசின் வழக்கை விசாரிக்க தடைகோரிய சீமானின் மனு நிராகரிப்பு!

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் கட்சி முதன்மை ...