இரவில் தொலைபேசியை பயன்படுத்துபவர்களா நீங்கள்! உங்களுக்கு வருகிறது ஆபத்து

portrait smiling teenage girl lying under blanket using mobile phone 94374456
portrait smiling teenage girl lying under blanket using mobile phone 94374456

இரவு நேரங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்கு நைட் மோட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிகளவு வெளிச்சம் கண்களுக்கு செல்லாது எனவும் இதனால் கண்கள் பாதுகாக்கப்படும் எனவும் எண்ணப்பட்டு வந்தது.

புதிய ஆய்வு ஒன்று இந்த எதிர்பார்ப்பை அப்படியே புரட்டிப்போட்டுள்ளது.

வழமையான வெளிச்சத்துடன் கைப்பேசியை பயன்படுத்துவதை விடவும் நைட் மோட் வசதியில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது.

மான்செஸ்ரர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது மங்கிய வெளிசச்சம், குளிர்மையான வெளிச்சம் என்பனவற்றுடன் கடுமையான சூடான வெளிச்சம் என்பவற்றினை வெவ்வேறாகப் பயன்படுத்தி ஆரோக்கியத்தினை அவதானித்துள்ளனர்.

இதன்போது எலிகளின் நித்திரை செய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.