கூடுதலான விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கை

5 tyy
5 tyy

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் கொழும்பு அரிசி வர்த்தக சந்தையில் விசேட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது இவர்கள் சம்பந்தப்பட்ட அரிசி விற்பனையாளர்களுக்கு அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை முற்றுகையிடும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை அடுத்து நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சட்ட விரோதமாக அரிசியை பதுக்கி வைத்து கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்று அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.