சற்று முன்
Home / செய்திக்குரல் / புலம் / வைரலாகும் சினம்கொள் திரைப்பட பாடல்

வைரலாகும் சினம்கொள் திரைப்பட பாடல்

விடுதலைப் புலிப் போராளி ஒருவனின் சினத்தை வெளிப்படுத்தும் ‘தனிமரம் ஒன்று காற்றினில் ஆட..’ என்ற சினம்கொள் திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முழுக்க முழுக்க ஈழத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் சென்னையில் நடைபெற்றன.

பாக்கியலக்‌ஷ்மி டோக்கீஸ் என்ற சென்னையை சேர்ந்த திரைப்பட நிறுவனம் வெளியிடும் இத் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளது.

கனடாவை சேர்ந்த ஈழத் தமிழரான ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் இந்திய இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் ஈழத்தை சேர்ந்த கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். அத்துடன் ஒளிப்பதிவு பணியை பழனிகுமார் மாணிக்கமும் படத்தொகுப்பை சிவலிங்கம் அருணாச்சலமும் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமரம் ஒன்று காற்றினில் ஆட..’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்றை பெற்று வருகின்றது. ஆழமான வரிகளால் அமைந்த இந்தப் பாடல் விடுதலைப் புலிப் போராளி ஒருவனின் இன்றைய நிலைப் பேசுவதாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா ...