இன்றையநாள்( 27டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 12
Up Country Lindhula Hospital 2 12

மேஷம்

கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மதிப்பார்கள்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும் தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம்தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மிதுனம்

உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

நீண்ட நாளாக வராமலிருந்த பணம்கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் அவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலையை சாதாரணமாக மூடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

குடு்ம்பத்தாரின் ஆதரவு பெருகும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றும். தெய்வ அனுகூலம் உண்டு நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமாக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் மனஸ்தாபங்கள் உருவாகும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட‘ இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைதீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் தடைகளைத்தாண்டி வெல்லும் நாள்.

துலாம்

திட்டமிட்ட படி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.பிரபலங்களின்அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பேச்சில் இனிமை இருக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும் .உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலைவலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மகரம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளைக் அடிக்க வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதத்தை தவிர்ப்பது நல்லது . உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள் . போராடி வெல்லும் நாள்.

கும்பம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இப்போ வீட்டிற்கு தேவையான பொருட்களைவாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மீனம்

குடுத்த வாக்கை காப்பற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் சிலருக்கு உங்கள் உதவிகேட்டு வரு வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் பலிதமாகும் நாள்.