அமைச்சர் டக்ளஸை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

IMG 3909
IMG 3909

மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி அவரது கட்சி அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்”, கைது செய் கைது செய் ஈ.பி.டி.பியை கைது செய்”, ஆட்கடத்தல்காரன் டக்ளஸ் அரச ஒட்டுக்குழு”, தமிழரை அழிப்பதில் அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டது.

ஈ.பி.டி.பி “,வவுனியாவில் காணாமல் போனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அத்தனை ஈ.பி.டி.பியினரையும் கைது செய்”, ஈ.பி.டி.பி என்ற துணை இராணுவக் குழுவே கடத்தலில் ஈடுபட்டவர்கள்”, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கடத்திவிட்டு இப்போது எம்மிடம் வருகிறான் டக்ளஸ்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற போது ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் போராட்டக்காரர்களின் கோஷங்கள் கேட்காமல் இருக்க கட்சி அலுவலகத்தின் வாயிலில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு சினிமாப் பாடல்கள் பெருத்த ஒலியில் ஒலிக்க விடப்பட்டிருந்தன.

இதனால் போராடடத்தில் ஈடுபடடவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில் இருந்த பதாகைகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து பறித்தமையினால் அங்கு சிறிது நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு நின்ற ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்கள் குறித்த நபரை பிடித்து அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.