இன்றைய நாள்(03.01.2020) உங்களுக்கு எப்படி ?

BPiclh8ginrayarasipalan211152 1
BPiclh8ginrayarasipalan211152 1

மேஷம்

வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்

சின்ன சின்ன சந்தர்ப்பங் களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோ ரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

இதுவரை இருந்த சோர்வு, மனக்கவலை நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல்உருவாகும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத் தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் தொடர் வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கூட்டாளிகள், நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக் கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர் கள். அமைதியான நாள்.

விருச்சிகம்

வருங்காலத்திற்கு தேவையான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செல
வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதா
யம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.அரசு வழியில் அனுகூலம் உண்டாகும் என்பதால் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர் கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கிமகிழ்ச்சி உண்டாகும்.வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பழைய பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உற்சாகமான நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.