‘வர்க்க’ வேறுபாடுகளை களைந்து சேவை யாற்றுவேன் – ஆளுநரின் உரையில் வியக்கும் செய்தி!

6 1
6 1

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கடமை ஏற்றுள்ள வடக்கின் முதல் பெண் ஆளுநர் திருமதி பிரின்ஸ் சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற, அவரைக் கெளரவிக்கும் நிகழ்வில் ஆற்றிய உரையின் ஒரு வார்த்தை வடக்கு வாழ் புத்தியீவிகளின் மத்தியில் பெரும் பாராட்டையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

வடக்கு மாகாண மக்களுக்காக, மக்களின் உணர்வுகளுக்காக, மாகாண மக்களின் ஏக்கங்களுக்காக ஜனாதிபதி தர விரும்பிய பதவியாகவே ஆளுநர் பதவியை நான் பார்க்கின்றேன்.

வடக்கு மக்களின் நாடித் துடிப்பை நன்கறிந்துள்ளேன். வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களின் வேதனைகளை ஆற்றுப்படுத்தவும் என சகல நடவடிக்கைகளுக்கும் உத்தரவாதம் பெற்ற பின்னரே நான் இங்கு ஆளுநராக வந்துள்ளேன்”.

அரசியல் கொள்கைகளுக்கு அப்பால், முரண்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் ,இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் தான் சேவை ஆற்ற வந்துள்ளேன் என்று தெரிவித்த விடயத்தில், அவர் குறிப்பிட்ட வர்க்க வேறுபாடு என்கின்ற வார்த்தை வடக்கு மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு அறிந்து இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகின்றது .

தற்போதைய ஆளுனரின் முக்கிய சிறப்பு அவர் அரசியலுக்கு வெளியே இருப்பதும், அதிகார நடைமுறையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பதும்தான். யாழ்ப்பாணத்து மக்களின் உளவியலை புரிந்தவராக ஆளுநர் இருக்கிறார். இது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என கருதுகின்றோம் .