எலுமிச்சை தீபத்தின் தீமைகள் !

TN 20151102122655129565
TN 20151102122655129565

கனிகளில் ராஜகனி எது தெரியுமா ? எலுமிச்சம்பழம் தான் அது . இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).

இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீதுர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி, அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது.

மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது. அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.

அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.