குளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விடயங்கள்

201701260818117176 Winter health care SECVPF
201701260818117176 Winter health care SECVPF

குளிர்காலத்தில் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத்தொடங்கும். அதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

குளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

சமையலுக்கு பயன்படுத்தும் பாரம்பரிய மசாலா பொருட்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை.

கருப்பு மிளகு, இஞ்சி, சோம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள் போன்றவை சளி, இருமல், காய்ச்சலுக்கு நிவாரணம் தரும். துளசி தேநீர் தயாரித்தும் பருகலாம்.

நன்றாக தூங்குவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். அதிலும் குளிர்காலத்தில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆகவே போதுமான நேரம் தூங்குவது அவசியமானதாகும்.

யோகாசனம் செய்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கைகொடுக்கும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். உடல் முழுவதும் ரத்த வெள்ளை அணுக்களை வலுப்படுத்தவும் கைகொடுக்கும்.