காந்தப்புல அதிர்வுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்

592260main blackhole outflow
592260main blackhole outflow

இரண்டு இறந்த நட்சத்திரங்களின் மோதலால் அண்டவெளியில் காந்தப்புல அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.

லிகோ வீர்கோ சர்வதேச கூட்டு ஆய்வுகூடத்தில் இதற்குரிய சமிக்ஞைகள் பெறப்பட்டுள்ளது.

லிகோ வீர்கோ சர்வதேச கூட்டு ஆய்வுகூடத்தில் இவ்வாறானதொரு சம்பவத்தினை அவதானிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

இவ்விரு நட்சத்திரங்களும் ஒன்றாக இணைவதற்காகவே இவ்வாறு மோதியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

அவ்வாறு இரு நட்சத்திரங்களும் இணைந்தால் அது எமது சூரியனை விடவும் மூன்றே கால் மடங்கு திணிவு கூடியதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற நட்சத்திர மோதலின்போது இணைந்த நட்சத்திரங்களின் திணிவு சூரியனை விடவும் 2.7 மடங்கு அதிகமாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.