எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இளநீர்

Coconut with straw
Coconut with straw

கோடைக்காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் பானங்களில் ஒன்று தான் இளநீர்.

இது வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் நல்ல மருந்து.

மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது.

இருப்பினும் சிலர் வெறும் வயிற்றில் இளநீரை குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படுத்தும் என்று கூறுகின்றார்கள்.

இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள வேண்டுமாயின் இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும்.

இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.