புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்- நடை பவனி

DSC 0522
DSC 0522

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அதிபர், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் நடை பவனி இன்று (11)காலை 9.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது.

குறித்த நடை பவனி பாடசாலையில் ஆரம்பித்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக சென்று எழுத்தூர் வீதியை சென்றடைந்தது.

நடை பவனி ஆரம்பிக்கப்பட்ட போது புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவரீதியாக வானுர்தி மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

குறித்து நடை பவனியில் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள், என சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.