பயிற்சி காலத்தில் தொழில்முறை கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

dalas
dalas

விளையாட்டு வீரர்களின் பயிற்சி காலத்தில் தொழில்முறை கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இணங்கியுள்ளார்.

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளுடன் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விளையாட்டு வீர,வீராங்கனைகளுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் இலவச ஊட்டச்சத்து உதவியை மீள வழங்குவதற்கும், பயிற்சிக் காலத்தில் தொழில்முறை கொடுப்பனவை வழங்குவதற்கும் அமைச்சர் இணங்கியுள்ளார்.

மேலும் வெற்றிப்பெற்ற விளையாட்டு வீர,வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்கான தேசிய விழா ஒன்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் தாமரை தடாகம் அரங்கில் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.