சென்னை புத்தக கண்காட்சியில் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகங்களை அகற்ற கோரிக்கை!

Chennai book fair
Chennai book fair

‘சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகங்களை அகற்று மாறு பாரதீய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

புத்தக கண்காட்சியில் மாநில அரசாங்கத்தின் ஊழலை முன்னிலைப்படுத்தும் புத்தகங்களை விற்கும் ஒரு கடையை அகற்றிய மறுநாளே, தமிழக அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுகுறித்த ஒரு புத்தகத்தை விற்றதற்காக, பா.ஜ.க அரசு அங்கு விற்கப்படும் புத்தகங்களில் மேலும் சில தணிக்கைகளை செய்துள்ளது.

அதில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த புத்தகங்களை விற்பனை செய்ய அமைப்பாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று கட்சி செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

அதனை விட கொல்லப்பட்ட அந்த இயக்கத்தின் தலைவர் “வேலுபிள்ளை பிரபாகரன்” என்ற புத்தகம் கண்காட்சியில் மிகவும் விரும்பப்பட்ட வெளியீடுகளில் ஒன்றாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது