சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / கல்வியங்காடு மீன் சந்தை தொடர்பில் பொதுமக்கள் கோரிக்கை!

கல்வியங்காடு மீன் சந்தை தொடர்பில் பொதுமக்கள் கோரிக்கை!

கல்வியங்காடு மீன் சந்தையினை விஸ்தரித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் யாழ் மாநகரசபையின் ஆளுகையின் கீழிருந்த கல்வியங்காடு பொதுச்சந்தை புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை போதிய வசதிகளின்றி காணப்படுவதனால் மீன்களை வாங்கும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாட்களில் சுமார் 2500 அதிகமான பொதுமக்கள் குறித்த மீன் சந்தையை பயன்படுத்தி வருகின்ற நிலையில் மீன் சந்தையை விஸ்தரித்து உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தென்மராட்சி நகர கல்வி மட்டத்தை உயர்த்தவேண்டும் – வசந்தி அரசரட்ணம்

தரம் 1 இல் இந்த ஆண்டு 150 மாணவர்கள் மட்டுமே தென்மராட்சி பகுதியில் அனுமதி கோரிய ...