சற்று முன்
Home / உலகம் / 21 வயதுக்கு உட்பட்டவர்கள், கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை!

21 வயதுக்கு உட்பட்டவர்கள், கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை!

21 வயதுக்கு உட்பட்டவர்கள் கையடக்க தொலைபேசியை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவரே இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பிரேரணையில்,

“21 வயதுக்கு உட்பட்டவர்கள் கையடக்க தொலைபேசியை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கையடக் தொலைபேசியை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், தண்டப்பணமும் அபராதமாக விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை, ஒரு விழிப்புணர்வுக்காகவே தாம் சமர்ப்பித்ததாக செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையர் ஐவர் அவுஸ்ரேலியாவில் கைது

ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் ...