சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி!

imrul kayes
imrul kayes

பங்களாதேஷ் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான முதலாவது வெளியேற்று சுற்றுப் போட்டியில், சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி, இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியும், டாக்கா ப்ளடுன் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டாக்கா ப்ளடுன் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சதாப் கான் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.

சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், ராயட் எம்ரிட் 3 விக்கெட்டுகளையும், ரூபெல் ஹொசைன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹமதுல்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி, 17.4 ஓவர்கள் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிறிஸ் கெய்ல் 39 ஓட்டங்களையும், மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும், இம்ரூல் கைஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

டாக்கா ப்ளடுன் அணியின் பந்துவீச்சில், சதாப் கான் 2 விக்கெட்டுகளையும், மெயிடி ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை சாய்த்த ராயட் எம்ரிட் தெரிவு செய்யப்பட்டார்.