சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபார இடைநிறுத்தம் நீடிப்பு

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபார இடைநிறுத்தம் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபார இடைநிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய ரஞ்சன் !

எனது தொலைபேசியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த ...