சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காளான்!

images 11
images 11

மக்களை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சில இயற்கை உணவுப் பொருட்கள் கூட உதவுகிறது.

அவற்றில் ஒன்று தான் வெள்ளை காளான்கள்.

இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு இதில் குறைந்த அளவு மாப்பொருள் , மற்றும் சர்க்கரையும் உள்ளது. மேலும் இதில் நுண்ணுயிர்க் கொல்லி தன்மை இருக்கிறது.

வெள்ளை காளான்கள் சாப்பிட்டு வந்தால் அது ஒரு புரோபயாடிக் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

இது குடலில் நுண்ணுயிரிகள் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் கல்லீரலில் சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

வெள்ளைக்காளான் சக்கரை நோய்க்கு மற்றுமன்றி வேறு பல நோய்களுக்கும் தீர்வாகும்.

வெள்ளைக்காளானின் நன்மைகள்

சக்கரை நோயாளிகள் வெள்ளைக் காளானை சாப்பிடுவதால் அவர்களுக்கு குறைந்த அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை கிடைக்கிறது.
வைட்டமின் பி மற்றும் பாலிசாக்ரைடு போன்ற சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சத்தை வழங்குகிறது.
இரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

காளானில் உள்ள நுண்ணுயிர்க் கொல்லி , உணவிற்கு சுவையளிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் காளான்களை சேர்த்தால் ஆரோக்கியமாகவும் அதே வேளை சர்க்கரையின் அளவை கட்டுப்பாடாக வைத்திருக்கலாம்.

வேறு நன்மைகள்

இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படாத

காளான்களில் அழற்சி எதிர்ப்பு தன்மையும் உள்ளது.

இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பவர்கள் தாராளமாக இதை பயன்படுத்தலாம்.

வெள்ளை காளான் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.