சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய வேண்டும் – சம்பந்தன்

மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய வேண்டும் – சம்பந்தன்

இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்.

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போமாக.

எமது பூர்வீக நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழுந்து வளமான எதிர்காலத்தினை எமது வருங்கால சந்ததி கண்டுகொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

10 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடி அலைந்த தாய் உயிரிழப்பு!

காணாமல்போன தன் பிள்ளையை 10 வருடங்களாக தேடி அலைந்த நிலையில் தாய் ஒருவா் உயிரிழந்தார். கிளிநொச்சி ...