சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / மன்னாரில் இரு பொலிஸ் அதிகாரிகள் டெங்கினால் மரணம்

மன்னாரில் இரு பொலிஸ் அதிகாரிகள் டெங்கினால் மரணம்

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவரும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய எஸ்.ரத்னாயக்க (வயது-28) என்ற பொலிஸ் அதிகாரி நேற்று திங்கட்கிழமை (13) உயிரிழந்தார்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தென்மராட்சி நகர கல்வி மட்டத்தை உயர்த்தவேண்டும் – வசந்தி அரசரட்ணம்

தரம் 1 இல் இந்த ஆண்டு 150 மாணவர்கள் மட்டுமே தென்மராட்சி பகுதியில் அனுமதி கோரிய ...