ரஞ்சன் ராமநாயக்க கைது

ranjan
ranjan

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத் தடுப்புப் பிரிவினரால் மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து இன்று (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை தொடர்பில் நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதன் மூலம் நீதித்துறையில் தலையீடு செய்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டது.

அதனடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு சட்ட மா அதிபர் இன்று பிற்பகல் வழங்கிய பணிப்புரைக்கமைய நுகேகொட நீதிவான் நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப்பெற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.