சற்று முன்
Home / விளையாட்டு / இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டிலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை!

இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டிலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை!

இந்திய கிரிக்கட் வாரியம்; வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

அணித்தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பட்டியலில் நீடிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுவார்கள்.

இதேபோல் ஏ பட்டியலில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட் ஆகியோர் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவார்கள்.

பி பட்டியலில், விர்திமான் சகா, உமேஷ் யாதவ், உஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள்.

சி பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, ஹனுமா விகாரி, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள்.

கடந்த ஆண்டு வரை ஏ பட்டியலில் இருந்த தோனி உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு விளையாடவில்லை.

தற்போது அவரது ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், அவரது எதிர்காலம் குறித்து புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ...