மைத்துனனை கோடாரியால் வெட்டி கொலை செய்த நபருக்கு கடூழிய சிறை தண்டனை

b2924b90109a943ef896da80aa317e6f
b2924b90109a943ef896da80aa317e6f

தனது மைத்துனனை கோடாரியால் வெட்டி கொலை செய்த காரணத்திற்காக குடும்பத் தலைவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி குப்பிளான், சமாதி கோவிலடியில் சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் அவரது மைத்துனர் ரத்தினம் நகுலேஸ்வரன் என்பவரால் கோடாரியால் வெட்டப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரத்தினம் நகுலேஸ்வரன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்று(17)அழைக்கப்பட்ட குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.