நான் யாழ்ப்பாணத்தான் – கிளி.யில் 20 வீதமானவர்கள் கப்பலில் வந்தவர்கள் -சிறீதரன்

shritharan
shritharan

பிரதேசவாதம் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உரையினூடாக மீண்டும் பிரதேசவாதம் பற்றி பேசியுள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற இரணைமடு நீர்த்தேக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தினை பொறுத்த மட்டில் 80 சதவிகிதமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகவும், ஏனையவர்கள் சிங்கள காடையர்களால் துரத்தப்பட்டவர்களாகவும், இந்தியாவிலிருந்து நேரடியாக வந்து குடியேறியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனக்கு யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் 44000 வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் 28000 வாக்குகளும் அளித்ததாகவும் தெரிவித்தார்.

ஊடகங்களை பொறுத்த மட்டில் இரணைமடு விவகாரத்தினை வைத்து சரியான புரிதலின்றி தமது விளம்பரங்களுக்காக பிரதேச வாதத்தினை தோற்றுவிப்பதாகவும் சாடினார்.

இரணைமடு விவகாரத்தினூடாக பிரதேசவாதம் குறித்து பிழைப்பு நடத்த கூடாது என தெரிவித்திருந்த போதிலும் ‘தான் ஒரு யாழ்ப்பாணத்தான்’ எனும் கருத்தினூடாக மீண்டும் மீண்டும் பிரதேசவாத கருத்துக்களை வெளிப்படுத்துவதனை அவதானிக்க முடிகிறது.