மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விமல் வீரவன்ச விஜயம்

DSC 1072
DSC 1072

அமைச்சர் விமல் வீரவன்ச இன்று(18) காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு திடீர் விஜயம் செய்திருந்தார்.

அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு,அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தில் அதிகமான பெண் ஊழியர்களே கடமையாற்றுவதாகவும், கடினமான வேலைகளை தாங்களே செய்வதாகவும் தெரியப்படுத்தினர்.

இது தொடர்பான பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.