சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / விமல் வீரவன்ச றிஸாட்டிற்கு சவால்!

விமல் வீரவன்ச றிஸாட்டிற்கு சவால்!

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஸாட் பதியுதீன் அதனை பார்ப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்தினால் முடியாது என முன்னால் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கையில் இவ்வாறு சவால் விடுத்தார்.

மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தை இன்று (18) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“வட மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கண்கானித்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது அமைச்சின் நோக்கம்.

மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைளுர்,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

நாட்டிற்கு தேவையான வளங்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதுடன் வெளிநாட்டிடம் எதிர் பார்க்காமல் இருப்பதே எமது நோக்கம்.

குறித்த பயணம் ஒரு கண்காணிப்பு பயணமாகவே அமைந்துள்ளது. நான் தொழிற்சாலைகள் அமைச்சரே தவிர வர்த்தக அமைச்சர் இல்லை.

தொழிற்சாலை உற்பத்திகள் குறித்து சிறந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவற்றை தொடர்ந்து நாம் முன்னெடுத்து இருப்போம்.

தற்போதைய நாடாளுமன்றம் காலவதியாகி விட்டது. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்ட பின் இடம்பெறுகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதன் போது பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம்.

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னால் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.

ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் ;முல்லையில் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களங்களம் , மகாவலி அதிகாரசபை மற்றும் தொல்லியல் ...