இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

IMG 0676
IMG 0676

இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? என வினவி சமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து தம் கிராமத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மக்களால் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராம மக்கள் இன்று(18) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தங்களது கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவுச் செயற்பாடுகளால் கிராமத்தின் கௌரவம் பாதிக்கப்படுள்ளது.

அத்துடன் இளைஞர்கள், சிறுவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், தங்களின் கிராமத்தின் பெயரிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவு காரணமாக ஊரில் பெண்களை திருமணம் செய்துகொடுப்பதிலிருந்து, காணிகளை விற்பனை செய்வது வரை பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? ஒழுக்கமுள்ள கிராமத்தை சீரழிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள், எங்கள் ஊரை எங்களுக்க திருப்பித் தாருங்கள் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.