சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / 50 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் இந்தியா !

50 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் இந்தியா !

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சமூத்திர பாதுகாப்பு, இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான சமூத்திர வலயம் தொடர்பிலும் அதன் முக்கியதுவம் குறித்தும் தோவால் எடுத்துரைத்துள்ளார். அதேபோல் இரகசிய தகவல்களை திரட்டும் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவி ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய ...