அங்கஜனின் பணிப்புரைக்கு அமைய வைத்தியசாலை வடிகாண்கள் சுத்திகரிப்பு

IMG 7713
IMG 7713

யாழ்.போதனா வைத்தியசாலையின் சூழவுள்ள வடிகாண்களை சுத்திகரிக்கும் பணிகள் யாழ் மாநகர சபையினால் நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வடிகால்களால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார பிரச்சனைகள் நிலவி வருவதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து யாழ் மாநகர சபையின் ஆணையாளருக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் எம்.பி பணிப்பு விடுத்தார்.

இதற்கமைவாக நேற்று இரவு யாழ் மாநாகர சபையினரால் சுத்திகரிப்பு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.