சற்று முன்
Home / உலகம் / ஆன்மீகத் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

ஆன்மீகத் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

காசிம் சுலைமானியின் கொலை குறித்து ஈரான் ஆன்மீகத் தலைவர் வெளியிட்டு கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல் எனவும், அவரை போர்க்களத்தில் எதிர்க்க துணிவில்லாததால் அவசரப்பட்டு அமெரிக்கா கொன்று விட்டதாகவும் ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்துல்லா அலி கொமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அவர்களின் மக்கள் துன்பப்படுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் ஆன்மீகத் தலைவர் தனது வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை அமெரிக்காவின் எடுபிடிகள் என அவர் கூறியிருப்பது தவறானது எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சாஜிட் ஜாவிட்

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நிலையில் சாஜிட் ஜாவிட் நிதியமைச்சர் ...